வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு தீர்ப்பு.
யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி (சிவலோகநாதன் வித்தியா) கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் தப்பிச் செல்ல உதவியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சம்பவமாக அறிவிக்கப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுவிஸ் குமார் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியதாக துணைப் பொலிஸ் அதிகாரி லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் பின்னணி:
சிவலோகநாதன் வித்தியா, யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 18 வயது மாணவி. 2015 மே 13ஆம் தேதி, வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி மகாலிங்கம் சசிகுமார், இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்பட்டது. அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். சிறப்புப் போலீசார் மற்றும் விசாரணைக் குழு பல ஆதாரங்களை சேகரித்து, சம்பவத்திற்கான முழுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் மேலதிக விசாரணை களினூடாக 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றம் வித்யாவின் கொலைக்கு நீதி வழங்கியது, அந்தவகையில் முக்கிய குற்றவாளிகளில் 7 பேர் தூக்குத் தண்டனையும் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.






























