தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று (24) முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் பதிவிறக்கம் செய்ய முடியும். அனுமதி அட்டை கிடைக்காதோர் அல்லது பதிவிறக்கம் செய்ய முடியாதோர் விண்ணப்ப நகல் மற்றும் பரீட்சைக் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் பரீட்சைத் திணைக்களத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர், பாடம் அல்லது மொழிமூலம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் தேவைப்படின் ஆன்லைன் முறையில் ஒருமுறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என்றும், அதற்கான இறுதி நாள் 2026 ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீட்சை மையங்களை மாற்ற முடியாது என்பதுடன் பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.




























