Month: June 2026
இந்திய விமான நிலையங்கள்இந்தியாவில் விமானப் பயணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிசோதிக்கும் நோக்கில், DigiYatra பயோமெட்ரிக் (Biometric) அடையாள முறைமை 2026 ஜூன் 1 முதல் புதிய கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட இணைப்பு (Transit) பயணங்களுக்கு DigiYatra பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகஅடையாள தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகள் காகித ஆவணங்களை மீண்டும் மீண்டும் காட்டாமல் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பயண அனுமதி பகுதிகளை விரைவாக […]
Switzerland Newsசுவிட்சர்லாந்தில் 2025ஆம் ஆண்டில் பதிவான சிவில் விமானப் போக்குவரத்து விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 20% அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கூட்டாட்சி சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) தெரிவித்துள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு விமானப் பறப்புகளில் இடம்பெற்ற 4 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை வர்த்தக விமான சேவைகளில் உயிரிழப்புகளுடன் கூடிய விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 14,972 விமானப் பாதுகாப்பு சம்பவங்கள் […]
UK Newsபிரிட்டனில் 18 வயதான மாணவர் ஹென்றி நோவாக் (Henry Nowak) குத்திக்காயங்களால் உயிரிழக்கும் நிலையில் இருந்தபோதும் அவரை சந்தேகநபராக கருதி பொலிஸார் கைவிலங்கிட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த டிசம்பரில் இங்கிலாந்தின் Southampton நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தாக்குதலை மேற்கொண்ட விக்ரம் டிக்வா (23) பொய்யான இனவெறி குற்றச்சாட்டை முன்வைத்ததால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆரம்பத்தில் அவரது விளக்கத்தையே நம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் அந்த […]
பிரான்ஸ் வானிலை 2026பிரான்சில் 2026 ஆம் ஆண்டின் கோடை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பிரான்ஸ் தேசிய வானிலை நிறுவனம் Météo-France வெளியிட்டுள்ள புதிய மூன்று மாத காலநிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகள் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் மற்றும் மெடிட்டரேனியக் கடற்கரை பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகும் சாத்தியம் அதிகம் என கூறப்பட்டுள்ளது. அதேவேளை முழு கோடை காலமும் தொடர்ந்து […]
யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின் மூலம் அனலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த பேருந்து இனிமேல் அனலைதீவு பகுதிக்குள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அங்குள்ள மக்களின் நாளாந்த பயண நடவடிக்கைகள் மேலும் இலகுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருந்த இரு என்புக்கூடுகளும் சிறுவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மொத்தமாக 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு என்புக்குவியல் கண்டறியப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீது பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் மாணவர் ஒன்றியம் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த […]
பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதத்தால் உயர்ந்துள்ளதால் இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். இந்த பாரிய பொருளாதார சுமையை திறைசேரியால் மட்டும் தாங்க […]
சிறுவர்களைத் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கி மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத அடிப்படையிலான தவறான புரிதல்கள் அல்லது அரசியல் நோக்கங்களால் திசைதிருப்பப்படாமல் கையாளப்பட வேண்டிய தேசிய பிரச்சினை எனவும் கட்சி தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மத நிறுவனங்களுக்குள் மட்டும் நிகழும் தனிப்பட்ட பிரச்சினை அல்லாது நாடு முழுவதும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒரு பரந்த சமூகப் பிரச்சினை எனக் […]
இன்று மன்னார் மாவட்டம் மாந்தைமேற்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பாலைக்குழி கிராம அலுவலர் பிரிவில் பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பால் சேகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் பிரதேச செயலாளர், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். இந்த புதிய […]