Month: June 2026
TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ByteDance-இன் இணை நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். Bloomberg Billionaires Index வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி அவரது சொத்து மதிப்பு 92.8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். TikTok செயலியின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள Doubao செயற்கை நுண்ணறிவு தளத்தின் வெற்றியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய […]
முதியோர் இல்ல தீ விபத்து 11 பேர் மாயம் என்ற அதிர்ச்சி சம்பவம் ஹொரணை அங்குருவத்தோட்ட பகுதியில் நேற்று மாலை பதிவாகியுள்ளது. முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தையடுத்து 11 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் 55 பேர் வரை காயங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுடன் ஹொரணை மற்றும் கல்பாத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அவசர மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]
அண்மைக்காலமாக நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக போலீஸார் தங்களது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு காணொளி (Video) தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவினர் அந்தப் பாடலைப் பாடிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து விசாரணை வரும் […]
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய […]
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதால் இலங்கையில் அடுத்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முன்பிருந்த அளவிற்கு உலக சந்தை விலைகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார். இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உலக சந்தை நிலவரம் மற்றும் […]
வவுனியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையின் கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில்,வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
நாடு முழுவதும் மூளைக்காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 250 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடல்நலக் குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் தொடர்பான நிலைமையை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்று தொடர்பான மேலதிக […]
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நூலகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார். விஜயத்தின் போது தனது மனைவியுடன் நூலக வளாகத்தில் அமைந்துள்ள டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நூலகத்தை பார்வையிட்ட அவர் ஒரு தொகை நூல்களை நூலகத்திற்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி யாழ்ப்பாண […]
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடனடி கட்டண உயர்வுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் கட்டணமே தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் நாளாந்தம் பொதுப் […]
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை எதிர்த்து மூன்று மூத்த சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்பதையும், அது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் மனுதாரர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட நீதிபதியை மட்டுமல்லாது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிப்பு போன்ற முக்கிய விடயங்களையும் முன்னிறுத்தியுள்ளது. […]