ஏடிபி சூரிய ஆற்றல் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக சூரிய மின்சார அமைப்புகளை நிறுவ முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சமூக அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினரும் மறைமுகமாக இதன் பலனைப் பெற முடியும்.Virtual Net Metering எனப்படும் முறையின் மூலம் மின்சார நன்மைகள் தகுதியான பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.மேலும் நாட்டின் மின்விநியோக கட்டமைப்பை நவீனமயப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. இது எதிர்காலத்தில் மின்சார விநியோக திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதித் தொகுப்பில் 35 மில்லியன் டொலர் சலுகைக் கடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 16.9 மில்லியன் டொலர் மானியம் மற்றும் ஜப்பான் கூட்டு கடன் முறைமை நிதியிலிருந்து 5.5 மில்லியன் டொலர் மானியம் ஆகியவை அடங்குகின்றன.ஆற்றல் துறையில் நிலையான வளர்ச்சியை நோக்கி இலங்கை முன்னேறும் நிலையில் ஏடிபி சூரிய ஆற்றல் திட்டம் நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளுக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.




























