கைத்தொழில் அமைச்சும் ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த NVQ-4 சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர் இலங்கையின் தொழில்முனைவோர் சிறிய உள்நாட்டு சந்தையில் மட்டுப்படாமல் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் இணைந்து சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
நாட்டில் தொழில்முறைப் பயிற்சிகள் நீண்டகாலமாக சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்படாததாலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக இளைஞர்கள் அவற்றில் ஆர்வம் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை மாற்றும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் 9ஆம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் தங்களது திறமைகளுக்கு ஏற்ப 12 கல்வி அல்லது தொழில்முறைப் பயிற்சி பாதைகளில் விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை குறைத்து நாட்டிலேயே தொழில் வாய்ப்புகளை உருவாக்க வலுவான பொருளாதார அடித்தளத்தை அரசு அமைத்து வருவதாகவும் தேசிய கைவினைப் பேரவை மற்றும் வடிவமைப்பு மையங்கள் மறுசீரமைக்கப்பட்டு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் அனுபவத்தைப் பெற்று எதிர்காலத்தில் சொந்த தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றும் அடுத்த இருபது ஆண்டுகளில் இலங்கை பாரிய பொருளாதார மாற்றத்தை எதிர்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.




























