கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியின் வரவு–செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் படகில் தற்போது ஓட்டைகள் விழுந்துள்ளன. அந்தப் படகு உடைந்து மூழ்கப்போகும் நிலை உருவாகியுள்ளது. அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதுடன், இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்” என தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நளிந்த ஜயதிஸ்ஸ, இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலைமையை சரிசெய்வதாக கூறியுள்ளார். அப்படிச் செய்தால் நல்லது. இல்லையெனில் அநுரவின் ஆட்சி கவிழ்வது தவிர்க்க முடியாததாகும்” என எச்சரித்தார்.
அத்துடன்,
“ஜனாதிபதியைச் சுற்றியுள்ளவர்களே அவருடைய படகில் ஓட்டைகளை உருவாக்கி வருகின்றனர். வடக்கில் முல்லைத்தீவிலும் கூட தேசிய மக்கள் சக்தியின் வரவு–செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.































