இந்தியன் ஆயில் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரகாந்தா, தனது மனைவி எலிசா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். அவர்களது வீட்டின் ஒரு பகுதியை ராஜு தாஸ் வாடகைக்கு எடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு மூவரும் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டில் இருந்த நகை மற்றும் பணமும் காணாமல் போயிருந்தது.
ஆன்லைன் சூதாட்ட இழப்பால் உருவான கொலைத் திட்டம்
ராஜு தாஸ் தனது தந்தையிடம் பெற்ற ரூ.4 லட்சம் கடனை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தக் கடனை அடைப்பதற்காக கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. கொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ராஜுவும் அமீர்தாஸும் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் இரும்புக் கம்பி மற்றும் சுத்தியலால் எலிசா, அவரது மகள், பின்னர் சந்திரகாந்தா ஆகியோரைத் தாக்கிக் கொலை செய்ததாக போலீஸார் கூறினர். காலை 8.30 மணிக்கு வீட்டுக்குள் சென்ற அவர்கள், பிற்பகல் 12.15 மணி வரை அங்கு இருந்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் பெங்களூரு தப்பிச் செல்ல, அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க சிமலுகுரி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். Assam Duliajan triple murder வழக்கில் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


































