சிமலுகுரி ரயில் நிலையத்தில் இருவர் கைது
இந்தியன் ஆயில் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரகாந்தா, தனது மனைவி எலிசா மற்றும் மகளுடன் துலியாஜனில் வசித்து வந்தார். வீட்டின் ஒரு பகுதியை ராஜு தாஸுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரகாந்தா, எலிசா மற்றும் அவர்களின் மகள் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்ததுடன், ராஜுவும் அங்கிருந்து மாயமாகியிருந்தார். இதையடுத்து போலீஸார் அவரைத் தேடினர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, ராஜுவும் அமீர்தாஸும் சிமலுகுரி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த பொருட்களுடன் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரு தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இருவரும் திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 30 வயதான ராஜு, தனது தந்தையிடம் வாங்கிய ரூ.4 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். கடனை அடைக்க கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகவும், கொலைகளை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் கூறினர்.
காலை 8.30 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த இருவரும், பிற்பகல் 12.15 மணி வரை அங்கே இருந்துள்ளனர். இரும்புக் கம்பி மற்றும் சுத்தியலால் எலிசா, மகள், சந்திரகாந்தா ஆகியோரைத் தாக்கிக் கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Assam online gambling murder வழக்கில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


































