Express Entry முறைமையின் கீழ் மூன்று முக்கிய குடியேற்ற திட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
- Canadian Experience Class (CEC)
- Federal Skilled Worker Program (FSWP)
- Federal Skilled Trades Program (FSTP)
விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வி, மொழித் திறன், வேலை அனுபவம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆன்லைன் சுயவிவரத்தை (Profile) உருவாக்க வேண்டும். தகுதி பெற்றவர்கள் Express Entry Pool ல் சேர்க்கப்படுவர். பின்னர் Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு Invitation to Apply (ITA) வழங்கப்படுகிறது. அழைப்பு கிடைத்தால் நிரந்தர குடியுரிமைக்கான முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கனடா தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப Category-Based Selection முறையையும் தொடர்கிறது. இதில் பிரெஞ்சு மொழித் திறன், சுகாதாரம், கல்வி, STEM, தொழிற்துறை, போக்குவரத்து, கனடிய அனுபவமுள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மூத்த மேலாளர்கள் மற்றும் திறமையான ராணுவ ஆட்சேர்ப்பாளர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கான அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
கனடாவில் குடியேற விரும்புவோர் தங்களது CRS மதிப்பெண்ணை உயர்த்த மொழித் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுதல் கூடுதல் வேலை அனுபவம் சேர்த்தல், மாகாண நியமனம் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.


































