இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 296 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 290 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் இன்றைய அகழ்வின் போது ஒரு என்புக்கூட்டுடன் இணைந்த நிலையில் தகர வடிவிலான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு சான்றுப் பொருளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறாது என்றும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி 300ஐ அண்மித்தது
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 17ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (05) நடைபெற்ற நிலையில் மேலும் 13 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே கண்டறியப்பட்ட எச்சங்களில் இருந்து மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமான என்புக்கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.































