நவம்பர் 9 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், முந்தைய காலநிலை உறுதிமொழிகளைச் செயல்படுத்துவது முக்கியமாக விவாதிக்கப்படும். புதிய இலக்குகளை அறிவிப்பதைவிட ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று COP31 தலைவர் மற்றும் துருக்கி சுற்றுச்சூழல் அமைச்சர் முராட் குரும் தெரிவித்துள்ளார்.
1.5 டிகிரி இலக்கை தாண்டும் அபாயம்
தொழில்துறை தொடங்கிய காலத்திலிருந்து உலகின் சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என காலநிலை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2015ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இந்த வரம்பை அடைவது இனி சாத்தியமற்றதாகி வருவது, பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகம் எதிர்கொள்ளும் சிரமத்தை வெளிப்படுத்துகிறது.
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எண்ணெய், பெட்ரோல் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் அரசுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்கின்றன. மின்சாரப் பயன்பாட்டை 2035ஆம் ஆண்டுக்குள் 21 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவதும் COP31 climate summit-இன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
மேலும், வெப்பநிலை உயர்வு மற்றும் தீவிர வானிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு நிதியுதவி வழங்குதல், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகுதல் ஆகியவையும் பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன.

































