தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிலிருந்து மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை மரண பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பிரதான சந்தேகநபருடன் அவரது மனைவி குண்டசாலை பிரதேச சபையில் பணியாற்றும் சாரதி மற்றும் மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



























