பிரான்ஸ் அரசு தற்போது 3133 என்ற புதிய தேசிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இது முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக அவலமாக உள்ளவர்கள் மற்றும் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் சந்திக்கும் வன்முறை மற்றும் தவறான நடத்தைகளை உடனடியாக அறிவிக்க உதவுகிறது.
பழைய 3977 இலக்கத்தை மாற்றி இத்தொலைபேசி இலக்கம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வாரத்தின் 7 நாட்களும், காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பயிற்சி பெற்ற உதவியாளர்கள் அழைப்பாளர்களுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆதரவுகளை வழங்குவர்.
மேலும் காட்சி அல்லது கேள்வி சவால்களுக்கான அணுகல் வசதியும் உண்டு. இந்த சேவை வன்முறை தவறான நடத்தைகள் அல்லது சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதரவுத் தளம் ஆகும்.





Leave a Reply