பெற்றோர் விரும்பினால் ஒரே நேரத்திலும் அல்லது மாறிமாறியும் இந்த விடுப்பைப் பயன்படுத்தலாம். 2026 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த விடுப்பு குழந்தை பிறந்ததிலிருந்து அல்லது வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிகபட்சம் 9 மாதங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். 2026 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை குழந்தை பெற்ற குடும்பங்களுக்கு இந்த 9 மாத காலக்கெடு ஜூலை 1 2026 முதல் கணக்கிடப்படும். 2027 மார்ச் 31க்குள் விடுப்பைத் தொடங்க வேண்டும். France News
இந்த திட்டம் தனியார் துறை ஊழியரே அரசுப் பணியாளர்கள் விவசாயத் துறையினர், கலைஞர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் சில பயிற்சி மாணவர்களுக்கும் பொருந்தும்.
விடுப்புக் காலத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தினசரி கொடுப்பனவு வழங்கப்படும். 70% முதல் மாதத்தில் ஊதியத்தின் 70% இரண்டாவது மாதத்தில் 60% வரை இழப்பீடு வழங்கப்படும். கணக்கீட்டிற்காக சமூகப் பாதுகாப்பு உச்சவரம்பான €4,005 (2026) எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த விடுப்பைப் பெற விரும்பும் ஊழியர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக தங்கள் முதலாளியிடம் அறிவிக்க வேண்டும். விடுப்பு தந்தை விடுப்பு அல்லது தத்தெடுப்பு விடுப்புக்கு உடனடியாகத் தொடருமானால் 15 நாட்கள் முன் அறிவித்தாலே போதுமானது. காலத்தில் வேலைஇல்லா உதவித்தொகை PreParE CMG, AJPP மற்றும் AJPA போன்ற சில உதவித்தொகைகள முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.





























