கிழக்கு பிரான்ஸில் உள்ள Territoire de Belfort, Bas-Rhin மற்றும் Haut-Rhin மாவட்டங்களில் 25 முதல் 50 சதவீதம் வரையிலான பெட்ரோல் நிலையங்கள் செயல்படவில்லை. பாரிஸ் நகரத்திலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிழக்குப் பகுதிகளில் ரைன் நதியின் நீர்மட்டம் குறைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாரிஸில் விநியோக சிக்கல் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக அதிகமாக எரிபொருள் வாங்கியது ஒரு காரணமாக இருக்கலாம்.
42 மாவட்டங்களில் 10 முதல் 25 சதவீத நிலையங்கள் பாதிப்பு
மேலும் 42 மாவட்டங்களில் 10 முதல் 25 சதவீதம் வரையிலான பெட்ரோல் பம்புகள் காலியாக உள்ளன. இதில் Haute-Garonne, Bouches-du-Rhône, Rhône, Isère, Loire-Atlantique, Nord, Moselle உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். பாரிஸைச் சுற்றியுள்ள Seine-et-Marne, Yvelines, Essonne, Seine-Saint-Denis உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த France fuel shortage நிலவரத்திலும், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 90 சதவீத நிலையங்கள் அணுகக்கூடியதாக உள்ளன. Corse-du-Sud, Haute-Corse, Corrèze மற்றும் Creuse மாவட்டங்களில் அனைத்து நிலையங்களும் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























