2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, காணொளிகளில் அடையாளம் காணப்பட்ட மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக்கொண்டிருந்தார். அதேவேளை, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்
வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டு நாள் விசாரணையின் முதல் நாளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டார். காவல்துறையினருக்கு தகவல் அளித்து, தனது செயல்கள் நிறுத்தப்படுவதற்கு உதவிய பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். நான்கு பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு நேரில் வந்திருந்தனர்.
மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளின்படி, அனைத்து பெண்களும் சோல்பிடெம் எனப்படும் தூக்க மருந்தை உட்கொண்டிருந்தனர். இந்த மருந்து, மாசான் பாலியல் வன்கொடுமை வழக்கிலும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Gard criminal court trial-ன் தீர்ப்பு நவம்பர் 13 வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.





























