இந்த வசதி 2026 ஜூன் 24 முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், இது பிரான்ஸ் விமான நிலையங்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகும். வெளிநாட்டு விமான நிலையங்களில் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு (Border Control) அடையாளச் சோதனைகளில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது. அங்கு வழக்கம்போல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்த, பயணிகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். வங்கி அட்டை வடிவிலான புதிய தேசிய அடையாள அட்டை (CNIe) இருக்க வேண்டும். மேலும் Android 11 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு அல்லது iOS 16.6 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் இயங்கும் ஸ்மார்ட்போனில் France Identité செயலி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
விமான நிலையத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்த France Identité செயலியை திறந்து “Digital Identity” பகுதியை காட்டினால் போதுமானது. பயணத்திற்கு முன் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

































