புதிய ஆணையின்படி சில வழக்குகள் தனி நீதிபதியால் விரைவாக விசாரிக்கப்படலாம். மேலும் குறிப்பிட்ட வகை வழக்குகளில் எழுத்து மூல ஆவணங்கள் காலக்கெடுகள் மற்றும் நடைமுறை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மேல்முறையீட்டு வழக்குகளை விரைவாக தீர்ப்பதே அரசின் நோக்கமாகும்.
இந்த மாற்றங்கள் புகலிட கோரிக்கையின் தகுதி விதிகளை நேரடியாக மாற்றுவதில்லை. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நடைமுறை மற்றும் வழக்கு விசாரணை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது தற்போது மேல்முறையீட்டு நடைமுறையில் இருப்பவர்கள் புதிய நடைமுறை விதிகளை கவனமாகப் பின்பற்றி தேவையான ஆவணங்களை காலவரையறைக்குள் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.





























