France address change, ஒரே ஆன்லைன் நடைமுறையில்

பிரான்சில் வீடு மாற்றம் செய்யும் நபர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் “Changement d’adresse en ligne” எனும் ஆன்லைன் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவையின் மூலம் ஒருவர் தனது புதிய முகவரியை ஒரே முறையில் பல அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு அறிவிக்க முடியும்.

இதன் மூலம் தனித்தனியாக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் குறைகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் வரித்துறை சுகாதார காப்பீட்டு அமைப்புகள் (CPAM) குடும்ப உதவித்தொகை அமைப்பு (CAF) ஓய்வூதிய நிதிகள் France Travail (முன்னாள் Pôle emploi) மின்சார சேவை வழங்குநர்கள் மற்றும் வாகன பதிவு சேவைகள் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு புதிய முகவரியை நேரடியாக புதுப்பிக்கலாம்.

மேலும் சில அமைப்புகளுக்கு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மாற்றங்களையும் அறிவிக்க முடியும். இந்த சேவையை பயன்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கணக்கு அடையாள விவரங்கள் (identifiants) தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FranceConnect மூலம் உள்நுழைய முடியாதவர்களும் தனிப்பட்ட “Changement d’adresse en ligne” கணக்கை உருவாக்கி இந்த சேவையை பயன்படுத்தலாம்.

அதேவேளை வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்லும் நபர்கள் இந்த சேவையின் மூலம் CPAM மற்றும் வரித்துறைக்கு வெளியேறும் தகவலை அறிவிக்கலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து மீண்டும் பிரான்சுக்கு திரும்பி குடியேறும் நபர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading