இந்த எச்சரிக்கையின் கீழ் Ain,Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Bouches-du-Rhône, Drôme, Gard, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie, Var, Vaucluse உள்ளிட்ட தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் அடங்குகின்றன.
இப்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 35°C முதல் 40°C வரை உயரக்கூடும் என்றும் இரவு நேரத்திலும் வெப்பம் குறையாமல் நீடிக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முதியவர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும் போதிய அளவு தண்ணீர் அருந்தி நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.































