புதிய மாற்றத்தின் அடிப்படையில் மணிநேர மொத்த (brut) SMIC சம்பளம் €12.02 இலிருந்து €12.31 ஆக உயர்கிறது. அதேபோல் வாரத்திற்கு 35 மணி நேரம் பணிபுரியும் முழுநேர ஊழியர்களின் மாதாந்திர மொத்த சம்பளம் €1,823.03 இலிருந்து €1,867.02 ஆக அதிகரிக்கிறது. இது மாதத்திற்கு €43.99 மொத்த உயர்வாகும். நிகர (net) சம்பளமும் €1,443.11 இலிருந்து €1,477.93 ஆக உயர்ந்து, மாதந்தோறும் சுமார் €34.82 கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இந்த புதிய சம்பள விகிதங்கள் பிரான்ஸ் பிரதான நிலப்பகுதி மட்டுமின்றி குவாதலூப், கயானா, மார்டினிக், லா ரியூனியன், செயிண்ட் பார்தலமி, செயிண்ட் மார்டின் மற்றும் செயிண்ட் பியர் மிக்கலோன் உள்ளிட்ட பிரெஞ்சு பிரதேசங்களிலும் அமல்படுத்தப்படுகின்றன. மயோட் (Mayotte) பகுதியில் மணிநேர SMIC €9.33 இலிருந்து €9.56 ஆக உயர்கிறது. France Tamil News
பிரான்ஸ் தேசிய புள்ளிவிவர நிறுவனம் (INSEE) வெளியிட்ட தகவலின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலைச் சுட்டெண் (IPC) வருடாந்திர அடிப்படையில் 2.2% உயர்ந்துள்ளது. சட்டத்தின் படி, இந்த உயர்வு 2% ஐ கடந்தால் SMIC தானாகவே மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதால் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.






























