2011க்குப் பிறகு அக்டோபரில் பதிவான குறைந்த அளவு
அக்டோபர் 2025இல் 8,823 பேர் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2024இல் இந்த எண்ணிக்கை 19,785 ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் மூலம், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு அக்டோபர் மாதத்தில் பதிவான மிகக் குறைந்த புகலிட வருகை இதுவாகியுள்ளது. 2011 அக்டோபரில் 4,106 பேர் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். புதிய Germany asylum applications எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு, புகலிட நடைமுறையில் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியது.
ஜெர்மனியின் கூட்டாட்சி உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்து வருவதாகவும், இந்தப் போக்கை நீடித்த முறையில் நிலைநிறுத்துவதே அடுத்தகட்ட நோக்கம் என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான புகலிட அமைப்பு ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. புகலிட விண்ணப்பங்களை கையாளும் முறைகளை ஒருங்கிணைத்தல், வெளிப்புற எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தல் மற்றும் குடியேற்ற நிர்வாகத்தை மேம்படுத்தல் ஆகியவை அதன் நோக்கங்களாகும்.
மேலும், 2024 செப்டம்பர் முதல் ஜெர்மனி தனது ஒன்பது அண்டை நாடுகளுடனான எல்லைகளிலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் சில புகலிடக் கோரிக்கையாளர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவதற்கு பரவலான எதிர்ப்பும் எழுந்துள்ளது.





























