ஜெர்மனி பிரான்ஸ் எல்லை – 2026 மார்ச் 15 முதல்.

2026 மார்ச் 15 முதல் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான நில எல்லையில் இருந்த தற்காலிக பாஸ்போர்ட் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் Schengen விதிமுறைகளின்படி பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாக பயணம் செய்யும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக ஜெர்மனி அரசு 2025 செப்டம்பர் மாதம் முதல் பாதுகாப்பு காரணங்களால் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அந்த நடவடிக்கை ஆறு மாத காலத்திற்கு இருந்தது. இந்த காலக்கெடு 2026 மார்ச் 15 நள்ளிரவில் முடிவடைந்ததால் எல்லை சோதனை நிலையங்கள் அகற்றப்பட்டு வழக்கமான பயண போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்

இதனால் கார் பேருந்து மற்றும் ரயில் மூலம் பிரான்ஸ் – ஜெர்மனி எல்லையை கடக்கும் பயணிகள் இனி வழக்கமான எல்லைச் சோதனைகளை சந்திக்க வேண்டியதில்லை. இருப்பினும் ஜெர்மனி போலீஸ் அதிகாரிகள் எல்லை பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் வரை உள்ள பகுதிகளில் உள்ளக கண்காணிப்பு (mobile patrol) நடவடிக்கைகளை தொடரலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் காரணமாக தினமும் வேலைக்காக அல்லது வணிகத்திற்காக இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயணம் எளிதாகியுள்ளது. Schengen ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பாவின் பல நாடுகளுக்குள் பொதுவாக பாஸ்போர்ட் சோதனை இல்லாமல் பயணம் செய்ய முடியும், ஆனால் பாதுகாப்பு அல்லது குடியேற்ற அழுத்தம் போன்ற காரணங்களால் சில நேரங்களில் நாடுகள் தற்காலிக கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாம்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading