சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

போலந்து எல்லைச் சோதனை – 6 மாதங்கள் நீட்டிப்பு

போலந்தின் உள்துறை மற்றும் நிர்வாக அமைச்சகம் (MSWiA), ஜெர்மனி மற்றும் லித்துவேனியாவுடனான ஷெங்கன் உள்நாட்டு தரை எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடையாள மற்றும் வாகனச் சோதனைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் புதிய ஒழுங்குமுறையை வெளியிட்டுள்ளது.

போலந்து எல்லைச் சோதனை 4 ஏப்ரல் 2026 அன்று காலாவதியாக இருந்த இந்த நடைமுறை உள்துறை அமைச்சர் மார்சின் கியர்வின்ஸ்கி கையொப்பமிட்டு 27 மார்ச் 2026 காலை வெளியிடப்பட்டது.

பால்டிக்–போலந்து–மேற்கு ஐரோப்பா இடம்பெயர்வு வழித்தடத்தில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட மனிதக் கடத்தல் வலையமைப்புகளின் அழுத்தம் தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நீட்டிப்பின் படி, முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பசுமை எல்லைப் பகுதிகளில் திடீர் சோதனைகள் தொடரும்.

எல்லைக் காவல்படை தகவலின்படி 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் போலந்து–பெலாரஸ் எல்லையில் சுமார் 25,000 சட்டவிரோத நுழைவு முயற்சிகள் பதிவாகியுள்ளன. அதில் லித்துவேனியாவிலிருந்து 478 சட்டவிரோத நுழைவுகளும் அதே வழித்தடத்துடன் தொடர்புடைய ஜெர்மன் எல்லையில் 247 இடைமறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

வெளி எல்லையான பெலாரஸ் பகுதியில் அதிக அழுத்தம் நிலவுவதால் உள்நாட்டு “பின்வாசல்கள்” மூடப்பட வேண்டும் என வார்சா வலியுறுத்துகிறது. இதனால ஜெர்மனி அல்லது லித்துவேனியா வழியாக போலந்திற்குள் நுழையும் அல்லது வெளியேறும் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு அடையாளச் சோதனைகள் கட்டாயமாக இருக்கும்.

குறிப்பாக ஸ்வியெக்கோ, ஓல்ஷினா, கோல்பாஸ்கோவோ, புட்ஸிஸ்கோ மற்றும் ஓக்ரோட்னிகி எல்லைக் கடப்புகளில் சோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. உச்ச நேரங்களில் பயணிகள் கார்கள் சுமார் 15 நிமிடங்கள் முதல் லாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இந்த வழித்தடங்களில் பயணம் செய்யும் நிறுவனங்களும் பணியாளர்களும் தேவையான அடையாள ஆவணங்களை வைத்திருப்பதுடன் கூடுதல் நேரத்தை திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading