ஜெர்மனி எல்லை சோதனை – 2026 மார்ச் 15 முதல்
2026 மார்ச் 15 முதல், Germany மற்றும் Switzerland இடையிலான நில எல்லையில் இருந்த தற்காலிக பாஸ்போர்ட் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் சுதந்திரமான பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த எல்லை சோதனைகள் முதலில் 2025 செப்டம்பர் 16 அன்று தற்காலிகமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. காரணமாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனிதக் கடத்தல் அதிகரித்தது. அந்த 6 மாத காலம் 2026 மார்ச் 15 நள்ளிரவில் முடிவடைந்ததால், ஜெர்மனி அரசு அவற்றை மீண்டும் நீட்டிக்காமல் நிறுத்தியுள்ளது.
இந்த முடிவால் தினமும் வேலைக்காக அல்லது வணிகத்திற்காக எல்லையை கடக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. முன்பு எல்லை சோதனைகள் காரணமாக கார்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் Schengen Area ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஸ்போர்ட் இல்லாமல் (அடையாள ஆவணம் மட்டும் கொண்டு) சுலபமாக எல்லையை கடக்க முடியும்.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
அதே நேரத்தில், ஜெர்மனி அரசு முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. எல்லை பகுதிகளில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் வரை போலீஸ் ரோந்து மற்றும் சோதனைகள் தொடரும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் நோக்கம் சட்டவிரோத குடியேற்றம் அல்லது குற்றச்செயல்களை கண்காணிப்பதாகும்.
இந்த மாற்றம் காரணமாக எல்லை அருகிலுள்ள நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயணம் மீண்டும் வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply