ஜெர்மனியின் வீஸ்பாடன் நகரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரித்ததற்காக ஒரு சிரிய நபரின் ஜெர்மன் குடியுரிமையை ரத்து செய்ய பெர்லின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிறுவனாக ஜெர்மனிக்கு வந்த இந்த நபர் குடியுரிமை பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு Instagram-ல் ஹமாஸ் போராளிகளின் படத்தை “Heroes of Palestine” என்ற குறிப்புடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் பலஸ்தீன் ஆதரவு பேரணிகளில் இவர் பலமுறை போலீசின் கவனத்துக்கு வந்துள்ளார். இச்சம்பவத்துக்கு பின்னர் குடியேற்ற அலுவலகம் அவரது குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் இந்த முடிவை ஆதரித்து ஜெர்மன் மதிப்புகளை மதிக்காத இயற்கை குடியுரிமையாளர்களுக்கு நாட்டில் இடமில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, குடியுரிமை தேர்வில் யூதம் மற்றும் இஸ்ரேல் தொடர்பான கேள்விகளை சேர்த்த ஜெர்மன் அரசு, “எங்கள் மதிப்புகளை பகிராதவர் ஜெர்மன் பாஸ்போர்ட் பெற முடியாது” என்பதையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading