சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேல் (43), நேற்று மாலை 6.50 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே நண்பர் ரகுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பூவரசன், நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலை சுட்டதாக கூறப்படுகிறது. முகம், கழுத்து மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரகுவின் வலது கையிலும் குண்டு பாய்ந்தது.
போலீஸாரைத் தாக்கியபோது துப்பாக்கிச்சூடு
பூவரசனை போலீஸார் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சிறிய அளவிலான தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைக் காட்டுவதற்காக இன்று காலை அவரை அழைத்துச் சென்றனர். அப்போது கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவைத் தாக்கி தப்ப முயன்றதாகவும், மற்றொரு போலீஸ்காரரான இம்தியாஸுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் மாவட்ட எஸ்.பி சிவராமன் தெரிவித்தார்.
தொடர்ந்து, பூவரசனின் வலது காலில் போலீஸார் சுட்டனர். காயமடைந்த போலீஸாரும் பூவரசனும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞானவேலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை உள்ளிட்ட 13 வழக்குகள் பூவரசன் மீது இருப்பதாக கூறப்படுகிறது. இந்த Gudiyatham PMK leader murder வழக்கில் பூவரசனின் நண்பரையும் குற்றவாளியாக சேர்த்து, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
































