ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொதுச் சபையில் பங்கேற்ற சர்வதேச ஒலிபரப்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகளின்போது இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். சர்வதேச ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின் சுற்றுலாத் துறையை உலகளாவிய பார்வையாளர்களிடம் அறிமுகப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச ஊடக வலையமைப்புகளுடன் புதிய வாய்ப்புகள்
ABC Australia நிறுவனத்தின் International பிரிவின் பொது மேலாளர் Claire Gorman, அதன் International Services பிரிவின் தலைவர் Nesryn Bouzaine, African Union of Broadcasting நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Gregoire Ndjaka, சீனாவின் RTPRC நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும் ABU துணைத் தலைவருமான Zhou Jihong ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநரும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இலங்கையின் விருந்தோம்பல், பாதுகாப்பு, இயற்கை அழகு மற்றும் மக்களின் அன்பான அணுகுமுறை குறித்து சர்வதேச ஒலிபரப்பு பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக கொழும்பின் ஈர்ப்பு குறித்து அவர்கள் குறிப்பிட்டதுடன், இலங்கையில் தங்களின் அனுபவம் எதிர்பார்ப்புகளைத் தாண்டியதாகவும் தெரிவித்தனர்.
சர்வதேச நிகழ்வுகளை நடத்துவது, அந்த நிகழ்வைத் தாண்டியும் உலக ஊடக வலையமைப்புகளுடன் நீடித்த தொடர்புகளை உருவாக்க உதவுகிறது என அமைச்சர் கூறினார். இதன் மூலம் புதிய சுற்றுலா சந்தைகளை அணுகவும், Sri Lanka tourism promotion பணிகளுக்கான புதிய வழிகளை ஆராயவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.






























