“Project Freedom” எனப்படும் இந்த திட்டத்தின் மூலம், அந்தப் பகுதிகளில் உள்ள கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க அமெரிக்க கடற்படை உதவி வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையில் எந்தவொரு தடையும் ஏற்பட்டால் அதற்கு கடுமையாக பதிலளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரான் அந்த நீரிணையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருவதும் அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடற்படை தடையை அமல்படுத்தியிருப்பதும் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நேர்மறையான நிலையில் உள்ளதாகவும் இது எதிர்காலத்தில் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


































