சூரிய ஆற்றல், காற்றாலை மின்சக்தி மற்றும் டீசல் மின் உற்பத்தி அமைப்புகளை மின்கல காப்பு வசதியுடன் ஒருங்கிணைக்கும் இத்திட்டம் சுமார் 4.3 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை வழங்குகிறது. விஜயத்தின் போது திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த உயர்ஸ்தானிகர் இது இந்தியா–இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டதுடன் உள்ளூர் சமூகங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
டெல்ஃப்ட் தீவில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டம் முன்னேற்றம்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள டெல்ஃப்ட் தீவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை அண்மையில் பார்வையிட்டார். இந்திய அரசின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் டெல்ஃப்ட் அனல் தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
































