இந்த தற்காலிக ஏற்பாடு டப்ளினில் உள்ள Immigration Services Registration Office (ISD) அலுவலகத்தில் IRP புதுப்பிப்பு விண்ணப்பங்கள் அதிகளவில் தேங்கியுள்ளதால் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளில் IRP புதுப்பிப்பு செயல்முறைக்கு 17 வாரங்களுக்கு மேல் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுப்பிப்பு ஒப்புதல் கிடைத்த பின்னரும் புதிய IRP அட்டை கிடைக்க சுமார் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம்.
இந்த சலுகையைப் பெற, விண்ணப்பதாரர் தனது IRP கார்டு காலாவதியாகும் முன்பே புதுப்பிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். பயணத்தின் போது, காலாவதியான IRP கார்டு, புதுப்பிப்பு விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கான மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் (OREG எண் உட்பட) மற்றும் நீதித்துறையின் Travel Confirmation Notice-இன் அச்சுப் பிரதியையும் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
அதேநேரம் பயணத்திற்கு முன் தாங்கள் பயன்படுத்தும் விமான நிறுவனம் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், மூன்றாம் நாடு வழியாக (Transit) பயணம் செய்பவர்கள் அந்த நாட்டின் விதிமுறைகளையும் முன்கூட்டியே சரிபார்க்குமாறும் அயர்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






























