இத்தாலி சமூக நலத்திட்டம் 10 ஆண்டுகள் நிரூபிக்க வேண்டும்
இத்தாலியில் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற 10 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை வெளிநாட்டவர்களுக்கு எதிரான மறைமுக பாகுபாடு என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் (CJEU) தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக அகதி பாதுகாப்பு அல்லது சர்வதேச பாதுகாப்பு பெற்றவர்களுக்கு இந்த நிபந்தனை சம உரிமையை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இத்தாலியில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தும் 10 ஆண்டு வசிப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்தால் Citizens Income எனப்படும் குறைந்தபட்ச வருமான உதவி திட்டம் மறுக்கப்பட்ட ஒருவரின் முறையீட்டின் அடிப்படையில் விசாரணைக்கு வந்தது.
இந்த இத்தாலி சமூக நலத்திட்டம் நாட்டுடன் வலுவான இணைப்புள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. ஆனால் நீதிமன்றம் இத்தகைய நீண்டகால நிபந்தனை பெரும்பாலும் வெளிநாட்டவர்களையே பாதிப்பதாகவும் அது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு முரணானதாகவும் தெரிவித்தது.
மேலும் சமூக உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு திட்டங்களில் சர்வதேச பாதுகாப்பு பெற்றவர்களும் அந்த நாட்டின் குடிமக்களுடன் சம உரிமை பெற வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 10 ஆண்டு வசிப்பு நிபந்தனை அகதிகள் மற்றும் குடியேறிகளின் அடிப்படை வாழ்வாதார உதவிகளை தாமதப்படுத்துவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் நீண்டகால சமூக நல நிபந்தனைகள் மீதும் எதிர்காலத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என பார்க்கப்படுகிறது.





Leave a Reply