சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நிராகரிக்கப்பட்ட அகதி களை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப புதிய திட்டம்

பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அகதி மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் Third-Country Return Hubs எனப்படும் மையங்களுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய கவுன்சில் உறுப்புநாடுகள் மால்டோவாவில் நடைபெற்ற சந்திப்பில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டவர்களை நேரடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாத சூழலில் ருவாண்டா, கானா, துனிசியா, உகாண்டா போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளில் தற்காலிக மையங்களில் தங்கவைத்து பின்னர் நாடுகடத்தும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. ஜெர்மனி, டென்மார்க், கிரீஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரிட்டனின் ருவாண்டா திட்டம் சட்ட சிக்கல்களால் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய ஐரோப்பிய அளவிலான அணுகுமுறையின் மூலம் illegal migration ஐ கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கை அகதிகளின் உரிமைகளை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் human rights black holes போன்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்