சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது.

இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் சட்டவிரோத வருகைகளின் எண்ணிக்கையை குறைப்பதும், குறைந்த நிலையில் தொடர்ந்து வைத்திருப்பதும் தான் எங்களின் முக்கிய இலக்கு என தெரிவித்தார்.

மேலும் குடியேற்ற முறையில் நடைபெறும் தவறான பயன்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. அதனால் உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு உதவுவதும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்ப்பதும் பாதிக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத குடியேற்ற வருகைகள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருந்தாலும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதன் பின்னணியில் 27 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குடியேற்றம் மற்றும் அகதி கொள்கையில் “புதிய அத்தியாயம்” தொடங்கப்படுவதாக புருன்னர் உறுதியளித்தார்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்