குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு அரசு வழங்கும் எரிசக்தி வவுச்சர் (Energy Voucher) திட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தற்போது தகுதியான குடும்பங்களை தேர்வு செய்ய வரி தகவல்கள் (Reference Tax Income மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை) மற்றும் வீட்டின் மின் ஒப்பந்த எண் (Electricity Delivery Point Number – PDL) ஆகியவற்றை இணைத்து (cross-check) அரசு கணக்கிடுகிறது. தகுதியான குடும்பங்களுக்கு அக்டோபர் மாதத்தில் Email அல்லது SMS மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது, அதன் பிறகு நவம்பர் மாதத்தில் voucher தானாகவே வழங்கப்பட்டது.
இதன் மூலம் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்காமலும் தகுதியானவர்கள் நிதி உதவி பெற்றுள்ளனர். இதற்கிடையில் Service Public என்ற பெயரில் வரும் சில Email அல்லது SMS-கள் போலியானவை (Phishing/Fraud) ஆகும் அவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கின்றன எனவே அவற்றுக்கு விழிப்பாக இருக்க வேண்டும்.
எரிசக்தி வவுச்சர் பெற குடும்பம் குறைந்த வருமானம் கொண்டதாக இருக்க வேண்டும், France-ல் வரி பதிவு செய்யப்பட்டிருக்கும், வீட்டில் மின் ஒப்பந்தம் உங்கள் பெயரில் அல்லது tax household-க்கு இணைக்கப்பட்டிருக்கும், France-ல் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் energy bills செலுத்தும் வீடாக இருக்க வேண்டும்.
தகுதி இருந்தும் voucher வரவில்லை என்றால், October 15, 2025 முதல் February 28, 2026 வரை ஆன்லைன் platform அல்லது Post மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் செய்ய France Connect அல்லது தனிப்பட்ட account மூலம் உள்நுழைய வேண்டும், Post மூலம் விண்ணப்பிக்க விரும்பினால், Form பூர்த்தி செய்து Agence de services et paiement, TSA 30500, 69307 Lyon CEDEX 7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். November தொடக்கத்தில் விண்ணப்பித்தவர்கள், approval கிடைத்தவுடன் November 19, 2025 முதல் voucher பெற்றுள்ளனர், பிறகு விண்ணப்பித்தவர்கள் approval க்கு பிறகு ஒரு மாதத்திற்குள் voucher கிடைக்கும்.
நீங்கள் தகுதியுடையவரா என்று சரி பாருங்கள்
உங்களுடைய தனிப்பட்ட கணக்கை திறப்பதற்கு, அல்லது உள்நுழைவதற்கு
எரிசக்தி வவுச்சரை (Energy Voucher) தகுதி உள்ளவர்கள் வீட்டுக்கான மின்சாரம், எரிவாயு, ஹீட்டிங் ஆயில் போன்ற எரிசக்தி செலவுகளை பூர்த்தி செய்யவும், தகுதியான இடங்களில் (hostels, nursing homes, independent living residences மற்றும் social residences) வசிப்பதற்கான ஹீட்டிங் செலவுகளை கட்டும் பொருட்டும் பயன்படுத்தலாம்.
2025 நிதி சட்டம் பிறகு Energy Voucher-ஐ வீட்டு energy renovation பணிகளுக்கு பயன்படுத்த முடியாது ஆனால் 2025 சட்டத்திற்கு முன்பு வழங்கப்பட்ட “work vouchers” அவற்றின் செல்லுபடியாகும் தேதிவரை செல்லுபடியாகும்.





Leave a Reply