சிபியோன் கடந்த 16ஆம் தேதி காணாமல் போனதாகவும், மர்மக் கும்பல் தன்னை கடத்திச் சென்றதாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாளே அவர் வீடு திரும்பி, கடத்தல் கும்பலிடமிருந்து தப்பியதாகக் கூறினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
எனினும், சிபியோனின் நடவடிக்கைகளிலும் பதில்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ரகசியக் கண்காணிப்புக்குப் பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உயர்ரக அச்சுப்பொறிகள் மற்றும் பணம் எண்ணும் நவீன இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அங்கு அச்சடிக்கத் தயாராக இருந்த 500 ரூபாய் நோட்டு அளவிலான 520 கட்டுத் தாள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த தங்கக் கடிகாரம் உள்ளிட்ட 46 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தத் தாள்கள் முழுமையாக அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்திருந்தால், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடியைத் தாண்டியிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
கடத்தல் நாடகம் குறித்தும் விசாரணை
கள்ளநோட்டு மோசடியை மறைக்க சிபியோன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றினாரா, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் அசல் பணமா அல்லது கள்ளநோட்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இந்த Kerala fake currency printing வழக்கில் பெரிய கும்பல் அல்லது செல்வாக்குமிக்க நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.






























