சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்பாக, கிராகோவின் பரபரப்பான மெயின் மார்க்கெட் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய காவலர்கள், தாக்குதல் தொடங்கிய மூன்று நிமிடங்களுக்குள் சந்தேக நபருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் அடக்கம்
கிராகோவ் காவல்துறை, சந்தேக நபர் திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக கூறியது. தாக்குதலில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் நால்வர் போலந்து நாட்டவர்கள்; ஒருவர் பிரிட்டிஷ் நாட்டவர், மற்றொருவர் ஆஸ்திரியப் பெண்.
சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார். பின்னர், அவை அவரது 53 வயது தந்தை, 52 வயது தாய் மற்றும் 21 வயது சகோதரி என அடையாளம் காணப்பட்டன.
ஆரம்ப விசாரணையில் அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தீவிர தேசியவாதி என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அவர்களில் ஐந்து வெளிநாட்டவர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்குவர். Krakow shooting suspect-ன் பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.






























