சிசிடிவி மற்றும் பிரேதப் பரிசோதனையில் திருப்பம்
தொட்டதொகுருவில் வசித்து வந்த உபேந்திரா, தனது மனைவி அனிதாவுடன் தனியார் வங்கிக் கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் நடத்தி வந்தார். கடந்த மாதம் 11ஆம் தேதி, உபேந்திரா குளியலறையில் வழுக்கி விழுந்து மாரடைப்பால் இறந்ததாக அனிதா, தனது மைத்துனர் ராஜேந்திராவிடம் கூறியுள்ளார்.
ராஜேந்திரா போலீஸாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உபேந்திராவின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததால் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அனிதாவின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த போலீஸார், அவருக்கு அருகில் தங்கியிருந்த டாக்சி ஓட்டுநர் மதுசூதன் ரெட்டியுடன் அடிக்கடி பேசியதை கண்டறிந்தனர். அவரது நடமாட்டமும் வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
விசாரணையில், உபேந்திரா தங்கள் உறவை எதிர்த்ததால் இருவரும் கொலை செய்ய முடிவு செய்ததாக மதுசூதன் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். நள்ளிரவில் வீட்டுக்குள் வந்த அவர் உபேந்திராவின் கழுத்தை நெரித்ததாகவும், அனிதா முகம் மற்றும் மூக்கை மூடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Bengaluru murder case தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






























