அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி 2025 அக்டோபரில் தொடங்கப்பட்ட தேசிய நடவடிக்கையின் பின்னர் ஆயிரக்கணக்கான கிலோ ஹெரோயின் ஐஸ், கஞ்சா மற்றும் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 168,000-க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Rehabilitation Amendment Bill அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கான மறுவாழ்வு வசதிகளை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கிராம மட்டத்தில் மதத் தலைவர்கள் கல்வி அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பிரச்சினை தற்போது தேசிய பேரழிவாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி “எந்த குழந்தையும் போதைப்பொருளின் பலியாக மாறாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்” எனக் கூறினார். சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகளுக்கும் எந்தவித அரசியல் பாதுகாப்பும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் எச்சரித்தார். நாட்டின் எதிர்கால தலைமுறையை பாதுகாக்க போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம் தேசிய பொறுப்பாக முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.




























