மேலும் கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த தேங்காய்களையும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் 8 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்த நிலையில் சம்பவத்தின் பின்னணி ஆயுதங்கள் சிறைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை நீர்கொழும்பு சிறையிலிருந்து பல்வேறு சிறைச்சாலைகளுக்கு கைதிகள் மாற்றப்பட்டதால் அங்குள்ள இடநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாகவும் மாற்றப்பட்ட சில கைதிகள் மற்ற சிறைகளில் இருந்த கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.





























