நாட்டின் பாதுகாப்பு வளங்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக வடகிழக்கில் இராணுவ மயமாக்கலைத் தொடரவும் தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வளங்கள் மீது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் பல்வேறு அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வடகிழக்கில் இராணுவக் குவிப்பு தெற்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக நீடித்து வரும் அதிகளவான இராணுவக் குவிப்புக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளில் பெருமளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் வன்முறை துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.































