இந்த வதந்தி, அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பு சோதனையுடன் தொடர்புடைய உண்மையான செய்தி திரித்துப் பரப்பப்பட்டதன் விளைவாக உருவாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி நவம்பர் 17 பிற்பகல் 2.20 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக அவசர எச்சரிக்கைகளை வழங்கும் அமைப்பு சோதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் நடைபெறுவது எச்சரிக்கை சோதனை
இந்த சோதனையை அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பும், அவசரநிலை மேலாண்மை அமைப்பும் இணைந்து நடத்துகின்றன. சோதனையின் போது தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, எச்சரிக்கைச் செய்தி ஒலிபரப்பப்படும். இது வழக்கமான, சட்டப்படி திட்டமிடப்பட்ட சோதனை; உலகளாவிய மின்தடை அல்ல.
‘தி சிம்ப்சன்ஸ்’ தொடரின் ஒரு காட்சியும் இந்த வதந்திக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் இணையம் முடக்கப்படும், வங்கிக் கணக்குகள் பாதிக்கப்படும், மக்கள் உணவு மற்றும் பணத்தை சேமிக்க வேண்டும் போன்ற ஆதாரமற்ற தகவல்களும் பரப்பப்பட்டுள்ளன.
பிரான்சில் 2027ஆம் ஆண்டு பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டால் அரசுத் துறைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதுவும் நவம்பர் 17 உலகளாவிய முடக்கத்துடன் தொடர்புடையது அல்ல. எனவே, November 17 global blackout rumor குறித்து பகிரப்படும் பதிவுகளை சரிபார்க்காமல் நம்பவோ பரப்பவோ வேண்டாம்.
































