பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம் என்றும் பயணிக்க முடியாதவர்கள் சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் வசிக்கும் மாணவர்களையும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்க வைக்க விடுதி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை மகாவலி கங்கை நீர்மட்டம் உயர்ந்ததால் சரசவி மெதுர விடுதியின் கீழ்தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.






























