ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இதற்காக வாங்கப்பட்ட நூல்களில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
புத்தகக் கொள்முதல் குறித்து சேகர்பாபு விளக்கம்
பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் இருப்பதாகவும், அந்தப் பதிப்பகம் குறித்து தமக்குத் தெரியாது என்றும் பெருமாள் முருகன் கூறியிருந்தார். மேலும், 300 பக்க நூல்களுக்கு பிற பதிப்பகங்களில் ரூ.350 விலை இருக்கும் நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களுக்கு ரூ.1,445 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நூல்களில் இடம்பெற்றுள்ள ISBN எண்கள் போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ஜூன் மாத முத்திரையிடப்பட்ட புத்தகங்கள் பெரியார் நூலகத்தில் இருப்பதாகவும், அந்த காலகட்டத்தில் தவெக ஆட்சி நடைபெற்றதாகவும் தெரிவித்தார். ஆட்சி அமைந்த பிறகும் பல புத்தகங்கள் வாங்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவதாகக் கூறிய அவர், முழுமையான உண்மை வெளிவந்த பின்னரே மக்களுக்கு நிலைமை தெரியவரும் என்றார். Periyar Library Book Controversy தொடர்பாக ஆளும் தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.































