இறுதிப்போட்டியை பாதித்த வானிலை
ஒரு தசாப்தத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்ட Peterite Cricket League 2026 தொடரில் எட்டு அணிகள் பங்கேற்றன. Resistance Panthers அணியை வீழ்த்தி Colombo Sports Hub இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணிக்காக Manelker de Silva மற்றும் Dushan Hemantha சிறப்பாக செயல்பட்டு, ஆறு ஓவர்களில் 90 ஓட்டங்களைப் பெற உதவினர்.
மற்றைய அரையிறுதியில் Shalith Fernando 32 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் Colombo Tuskers, Top Knock Titans அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் Colombo Tuskers ஆறு ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், வானிலை மோசமடைந்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு அணிகளும் இணைச் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
Plate Championship மற்றும் தனிநபர் விருதுகள்
Plate Championship பட்டத்தை Bamba Patriots அணி கைப்பற்றியது. அந்த அணி Foundation Guardians அணியை ஒன்பது ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. Bamba Patriots அணிக்காக Lahiru Dawatage 30 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடரின் சிறந்த வீரர் விருது Colombo Sports Hub அணியின் Manelker de Silvaவுக்கும், சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது Colombo Tuskers அணியின் Shalith Fernandoவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பந்துவீச்சாளராக Top Knock Titans அணியின் Inesh Fernandoவும், சிறந்த களத்தடுப்பாளராக Colombo Sports Hub அணியின் Dushan Hemanthaவும் தெரிவுசெய்யப்பட்டனர்.






























