செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்த டேன் பிரியசாதின் மரணம் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் அதிகாரியின் உயிரிழப்பு மற்றும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்படும் திறைசேரி அதிகாரி ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் ஆகிய சம்பவங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் தொடர்பிலும் தெளிவற்ற சூழல் காணப்படுவதாக கூறிய அவர் இவ்வாறான சம்பவங்களை சாதாரண தற்கொலை அல்லது இயல்பான மரணங்களாகக் கருதி புறக்கணிக்க முடியாது என்றார். இந்த மரணங்களின் உண்மை நிலையை வெளிக்கொணர அரசாங்கத்தால் சுயாதீனமான உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாவிட்டால் அமெரிக்காவின் FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தினார்.



























