பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இரத்மலானை University of Vocational Technology தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய HD தொலைக்காட்சி கலையகம் 2026 மே 26 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
இதனுடன் ஒலிபரப்புக் கலையகம், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் உள்ளிட்ட பல புதிய இணை நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதுடன் UOVT Greening Policy என்ற பசுமை கொள்கையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
2030 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகத்தை கார்பன் வெளியேற்றமற்ற கல்வி சூழலாக மாற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும்.





Leave a Reply