மருத்துவமனையில் 27 பேர் சிகிச்சை
சாண்டா பார்பரா மற்றும் அருகிலுள்ள கோலெட்டா நகரில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 24 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். திங்கட்கிழமை நிலவரப்படி, மூவர் மருத்துவமனையில் நிலையான நிலையில் இருந்தனர்.
இந்த உடல்நலக்குறைவுக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் தற்போது பரிந்துரைக்கப்படவில்லை என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்ட போட்டியாளர்கள் மருத்துவ உதவியைப் பெற்று, சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்றும் போலீசார் கூறினர்.
பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பாதையில் பல ஆயிரம் பேர் ஓடிய இந்த Santa Barbara half marathon போட்டி, வழக்கத்தைவிட அதிக வெப்பமான நாளில் நடைபெற்றது. நண்பகலில் வெப்பநிலை 86 ஃபாரன்ஹீட் (27 செல்சியஸ்) வரை உயர்ந்தது. வழக்கமாக நவம்பர் தொடக்கத்தில் வெப்பநிலை 70களின் குறைந்த அளவில் இருக்கும்.
போட்டி இயக்குநர் டேவிட் மோனிகோ கூறுகையில், நீரிழப்பு மற்றும் அதிக வெப்பம் காரணமாக மருத்துவக் கூடத்திலிருந்து 15 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் சென்ற அடையாளம் வெளியிடப்படாத ஓட்டப்பந்தய வீரர் ஒருவர், தான் மயங்கி விழுந்ததாகவும், ஓட்டத்தின் சில பகுதிகள் நினைவில் இல்லை என்றும் கூறினார். சிலர் மாயத்தோற்றம் ஏற்பட்டதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.































