இந்த முயற்சிக்கான சரியான நிதி ஒதுக்கீடு 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படும் என அவர் கூறினார்.
விமான நிறுவனத்தின் நிதிச் சவால்கள்
நிதி அமைச்சின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரிக்கு முந்தைய இழப்பாக 35.6 பில்லியன் ரூபாயை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் நிகர இழப்பு 12 பில்லியன் ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் வருவாய் 62.6 பில்லியன் ரூபாயிலிருந்து 82.8 பில்லியன் ரூபாயாக உயர்ந்தபோதும், செலவுகள் 40.4 சதவீதம் அதிகரித்து 95.2 பில்லியன் ரூபாயானது. விமான எரிபொருள் செலவு 93 சதவீதம் உயர்ந்து 41.2 பில்லியன் ரூபாயை எட்டியது. மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்ததால் சில பிராந்திய சேவைகள் இடைநிறுத்தப்பட்டதும் செயல்பாடுகளை பாதித்ததாக அறிக்கை தெரிவித்தது.
ஸ்ரீலங்கன் கேட்டரிங்கின் 3.4 பில்லியன் ரூபாய் நிகர வருமானத்தை கணக்கில் கொண்ட பின்னரும், குழுமத்தின் நிகர இழப்பு 32.2 பில்லியன் ரூபாயாக இருந்தது. 2026 ஜூன் இறுதியில் நிறுவனத்தின் மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாகவும், சொத்துகள் 209.9 பில்லியன் ரூபாயாகவும் இருந்தன. SriLankan Airlines profitability plan இன் ஒரு பகுதியாக, நிதி நிலைத்தன்மை மற்றும் வணிகச் செயல்திறனை ஆய்வு செய்யும் மறுசீரமைப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.































